பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்க வேண்டியிருக்கும்: பாஜகவிற்கு ஸ்டாலின் எச்சரிக்கை  – Kumudam

Spread the love

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனை தொகுதி மறுவரையறையா?

எந்த மாநிலத்துடனும் ஆலோசனை செய்யாமல் தொகுதி மறுவரையறையை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தொகுதி மறுவரையறைால் பாதிக்கப்படும் மாநிலங்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான்; கொள்கையே முக்கியம். நான் முதலமைச்சர் மட்டும் அல்ல, திராவிட பேரியக்கமான திமுகவின் தலைவர். தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எச்சரிக்கை இது.

நாங்கள் சுயமரியாதைக்காரர்களான எங்களுக்கு கொள்கைகள்தான் முக்கியம். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைப்போம். மோடிக்கு தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை. என அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசியுள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *