பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

acc2
Spread the love

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதிக்கு பங்கர்மா என்ற இடத்தில் இருந்து தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

acc1
சபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஜமால்திபூர் கிராமத்தல் வந்து கொண்டு இருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி திடீரென பஸ்சின் பக்கவாட்டில் உரசி சென்றது.
இந்த விபத்தல் பஸ்சின் ஒரு பக்க ஜன்னல் ஓர இருக்கை பகுதி முழுவதும் சுக்குநூறாக நொறுங்கியது.

8 பேர் பலி

இந்த கோர விபத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்தவர்களில் மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கதறிதுடித்தனர். பலியானர்வர்களில் 2 பேரின் தலை தனியா துண்டானது.
விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்ட டிரைவர் சாகல்வன்ஷி சாலை வழியாக தப்பி ஓடிவிட்டார்.

acc3

அடையாளம் காண்பதில் சிக்கல்

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனவர்களில் சிலர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளனர். பலர் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *