கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு

Www
Spread the love

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்தாண்டு ஆக். 9&ந் தேதி அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான்.
இந்தவழக்கு கோல்கட்டாவில் செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்தாண்டு அக்டோபர் 7-&ந் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று மதியம் 2:30 மணியளவில் நீதிபதி அனீர்பான் தாஸ் தீர்ப்பை வெளியிடுகிறார். இந்த தீர்ப்பை நாடே எதிர்பார்த்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *