பாகிஸ்தானை சுற்றும் மர்மம்! வந்திறங்கிய ரஷ்யா, சீன, அமீரக ராணுவ விமானங்கள்! உற்று பார்க்கும் இந்தியா | Russian, Chinese and UAE Military Cargo Planes back to back Landing in Pakistan Amid US Iran Tension

Spread the love

International

oi-Vigneshkumar

இஸ்லாமாபாத்: அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா, சீனா மற்றும் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ராணுவ சரக்கு விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் ஏற்பட்டால், அதில் பாகிஸ்தானின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. நேரடி தாக்குதல்கள் சில காலம் இல்லை என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து இருந்து வந்தது. அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடந்ததால் தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என தெரிகிறது.

pakistan US Iran

பாகிஸ்தான்

இதற்கிடையே ரஷ்யா, சீனா மற்றும் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ராணுவ சரக்கு விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் IL-76MD, AN-124 மற்றும் ஐக்கிய அமீரகத்தின் IL-76 ரக சரக்கு விமானங்கள் பாகிஸ்தானுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விமானங்கள் ராணுவ பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவை எத்தகைய சரக்குகளை ஏற்றி வந்தன.. அது இப்போது பாகிஸ்தான் செல்ல உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

என்ன நடந்தது

பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் ஒன்றும் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் வங்கதேசத்தின் சிட்டகாங்கிலிருந்து AN-124 ரக சரக்கு விமானம் கராச்சியில் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரக விமானங்களின் ஒரே நேரத்தில் பாகிஸ்தான் வந்திறங்கியுள்ளது அங்கு ராணுவ தளவாட போக்குவரத்து அதிகரித்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

மேலும், வெறுமான ராணுவ உபகரணங்களை எடுத்து செல்ல இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றத்துடன் தொடர்புடையதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

உளவு தகவல்

இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கியத் தகவலாக, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்று ரஷ்யாவுக்கு சீனா உளவு தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் இப்போது ராணுவ விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது பல்வேறு கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்புவதாக இருக்கிறது.

இந்தியா

ரஷ்யாவுக்கு சீனா அனுப்பிய இந்த உளழு தகவல் குறித்து இந்தியாவும் இஸ்ரேலும் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலும் இதில் மாட்டிக் கொள்ளும். இதனால் இஸ்ரேல் இதில் கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானில் ஆயுத போக்குவரத்து அதிகரித்துள்ளதால் இந்தியாவும் இதில் கவனம் செலுத்தி வருகிறது. ஒருவேளை ஈரான் மீது அமெரிக்கா மிக பெரிய தாக்குதலை நடத்தினால் அது பிராந்திய போராக மாறும். உலக போராக கூட வெடிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *