பாகிஸ்தானை போட்டு பந்தாடும் ஆப்கானிஸ்தான்.. 28 பேரை கொன்று 32 பைட்டர்கள் சிறைபிடிப்பு.. பதற்றம் | Afghanistan says that 28 Pakistan fighters killed and 32 captured

Spread the love

International

oi-Nantha Kumar R

காபூல்: ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 28 பைட்டர்களை தாலிபான் ராணுவம் சுட்டு கொன்றதோடு, 32 பைட்டர்களை சிறை பிடித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகள். இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இருநாடுகள் இடையே 2,611 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லை உள்ளது. இந்த எல்லைகள் டுராண்ட் கோடு என்று அழைக்கப்படுகிறது.

Afghanistan pakistan

இதனை சர்வதேச எல்லையாக ஆப்கானிஸ்தான் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனால் நீண்டகாலமாக இருநாடுகள் இடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. தாலிபான்கள் ஆதரவு பெற்ற அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அவ்வப்போது எல்லையில மோதல் நடந்து வருகிறது.

இதற்கிடையே தான் தற்போது ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், ”பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்புடைய பல குழுக்களை சேர்ந்தவர்கள் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காவும், பாதுகாப்பின்மையை உருவாக்குவதற்காகவும் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தனர்.

இவர்களில் 28 பேர் கொல்லப்பபட்டுள்ளதோடு, 32 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நூரிஸ்தான் மாகாணத்தின் கம்தேஷ் மாவட்டத்தில் நடந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொல்லப்பட்ட, சிறை பிடிக்கப்பட்ட நபர்களில் பலரும் ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படை அல்லது அரசுக்கு ஆதரவு படையில் செயல்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது. பாகிஸ்தானின் தகவல் தொடர்பு துறை அமைச்சாகம் ஆப்கானிஸ்தானின் இந்த கூற்றை அடிப்படை ஆதாரமற்றது. பொய்யான தகவல் என முற்றிலுமாக மறுத்துள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தானை சேர்ந்த முன்னாள் பாதுகாப்பு படையினர் அல்லது ஆப்கான் அரசுக்கு ஆதரவாக செயல்படடவர்கள் அல்லது பிற போராளி குழுக்களை சேர்ந்தவர்களை ஒருபோதும் தாங்கள் எந்த பணிக்கும் சேர்க்கவில்லை என்றும் கூறியுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு ஆதரவாளர்கள் உள்பட முப்படையை சேர்ந்தவர்கள் யாராவது எதிரிகளிடம் சிக்கி கொண்டால் அதுபற்றி வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இல்லை. அந்த வகையில் பாகிஸ்தானும் இப்படி செய்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த விவகாரம் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *