பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது மூவர் பலியானதாகவும் எட்டு பேர் காயமுற்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
மர்தான் மாவட்டத்தில் தக்த்-இ-பாஹி பகுதியில் உள்ள பாலத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் காவலர்களும் உள்ளதாக மாவட்ட காவல் அதிகாரி பாபர் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் காவலர்கள் குறி வைக்கப்பட்டதாகவும் பாலத்தில் காவல்துறை வாகனம் கடந்த பிறகே குண்டு வெடித்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நவீன வெடிகுண்டு பாலத்தில் முன்பே பொருத்தப்பட்டிருந்தது.
மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.