பாக்கியராஜ்: காலை 9 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Live Updates

Spread the love

அரசு மரியாதையுடன் பாக்கியராஜின் உடல் தகனம்!

இந்தியத் திரையுலகின் ‘திரைக்கதை மன்னன்’ என்று என்றழைக்கப்படும் கே. பாக்கியராஜ் நேற்று (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார்.

‘சுவரில்லாத சித்திரங்கள்’ மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார். அவரின் திடீர் மறைவு திரைத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாக்கியராஜ்
பாக்கியராஜ்

அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். நேற்றிரவு மலையாள நடிகர்களான சுரேஷ் கோபி, மம்மூட்டி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில் பாக்கியராஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இன்று காலை தகனம் செய்யப்பட இருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *