பாக்., வெடிக்கும் புரட்சி? 20,000 கண்டெய்னரால் மூடப்படும் தலைநகர்! பின்னணியில் இம்ரான்கான் | Pakistan Capital walledoff with 20,000 containers ahead of PTI party protest demanding release of Imran Khan

Spread the love

International

oi-Nantha Kumar R

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 14 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இம்ரான் கான் சிறையிலேயே இறந்து இருக்க வாய்ப்புள்ளது என்று 3 ராணுவ அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டத்துக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பிரதமராக இருப்பர் ஷெபாஸ் ஷெரீப். இவருடைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை நடத்தி வருகிறார்.

pakistan-capital-walledoff-with-20-000-containers-ahead-of-pti-party-protest-demanding-release-of-im

இந்நிலையில் தான் பாகிஸ்தானில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்த நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானை விடுவிக்க கோரி வரும் 27 ம் தேதி பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ‘பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப்’ கட்சி தொடங்கி அந்த நாட்டின் பிரதமரானார். கடந்த 2018 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக செயல்பட்டார். அதன்பிறகு அவரது ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 14 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயிலில் இம்ரான் கான் தொடர்ந்து பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி அவரது கட்சியை சேர்ந்தவர்கள் வரும் 27 ம் தேதி பெரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி அவர்கள் பேரணி புறப்பட உள்ளனர்.

இதனால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அவசரஅவசரமாக மூடப்படுகிறது. இஸ்லாமாபாத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க சுமார் 20 ஆயிரம் கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கண்டெய்னர்கள் உள்ளே மணல் நிரப்பி சாலைகளுக்கு நடுவே தடுப்பு சுவராக ‘வெல்ட்’ வைக்கப்பட உள்ளது. இ அதுமட்டுமின்றி மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யவும், போதிய அளவு ரத்தங்களை கையிருப்பு வைக்கவும், முக்கியத்துவம் இல்லாத அறுவை சிகிச்சைகளை தள்ளிவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் இருந்து 20 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். இதுவதிர பாராமிலிட்டரி ஃபோர்ஸ், ராவல்பிண்டி, அடோக், ஜீலம், மியான்வாலி பகுதியில் இருந்து பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வரவழைக்கப்படுகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஜமாத் இ இஸ்லாமி அமைப்பும், விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. நாட்டில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத் இ இஸ்லாமி அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தும் நிலையில் தற்போது இம்ரான் கான் கட்சியுடன் சேர்ந்துள்ளனர்.

அதேபோல் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர், உரம் உள்ளிட்டவை இல்லாததை கண்டித்து விவசாய அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் போராட்டம் மிகவும் வீரியமாக இருக்கும். பல லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்பதால் அன்றைய தினம் வன்முறை அல்லது உள்நாட்டு புரட்சி ஏற்படலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் அரசு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் Dawn செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இஸ்லாமாபாத்தில் கண்டெய்னர்கள் குவிப்பு, பள்ளங்கள் தோண்டுதல், கூடுதல் படைகளை நிலைநிறுத்துதல் உள்ளிட்டவற்றை பார்க்கும்போது அரசு ஒரு அரசியல் சார்ந்த போராட்டம் என்பதை தாண்டி பெரிய படையெடுப்பை எதிர்கொள்வது போல் தயாராகி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *