இது குறித்து தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்கவும், உரிய பரிந்துரைகளைச் செய்யவும், பிரச்னையைத் தீர்க்கவும் அல்லது முறைகேடுகள் தொடராமல் தடுக்கவும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு வழிமுறை ஆளுநர்தான்.
ஆளுநர் என்பவர் இந்த நாட்டுக்கு அவசியமற்றவர்; ‘ஆட்டுத் தாடி’தான் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ‘ஆளுநர் தேவையில்லை’ என்று சொல்லும் மாணிக் தாகூர், அந்த மாநிலங்களின் ஆளுநர் மாளிகை வாசலில் சென்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கட்டும். அப்படிச் செய்ய அவருக்குத் தைரியம் இருக்கிறதா?

பிரச்னையைத் திசைதிருப்புவது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகப் பேசுகிற, அவருக்கு முட்டுக்கொடுக்கிற ஒரு நபராக மாணிக்கம் தாக்கூர் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்துவரும் மாணிக்கம் தாகூர், இந்த விவகாரத்தில் த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர்போல், ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாகப் பேசுவதை என்னவென்று சொல்வது?
ஆளுநரை நாங்கள் ‘போஸ்ட்மேன்’ என்று சொல்லித்தான் அணுகியிருக்கிறோம். அவரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். அறிக்கையைக் கேட்டு வாங்குங்கள், உரிய பரிந்துரைகளைச் செய்யுங்கள் என்றுதான் வலியுறுத்தியிருக்கிறோம்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட நிர்வாக அதிகாரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைக்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதுகூடத் தெரியாமல் பேசுகிறார் மாணிக்கம் தாகூர்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல், டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர், த.வெ.க-வுக்கும் பனையூர் பங்களாவுக்கும் வாட்ச்மேன் மாதிரி செயல்பட்டு வருகிறார்!” என்றார் காட்டமாக.