நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென என்னிடம் வந்த பாரதிராஜா, ‘சட்டையைக் கழற்றிக் கொடு. நாடகத்துக்கு வேற டிரெஸ் போடணும். என்கிட்ட டிரெஸ் இல்லடா’ எனக் கேட்டார்.
நானும் சட்டையைக் கொடுத்துவிட்டேன். பிறகு, ‘நாளை இதே சட்டையைப் போட்டுக் கொண்டுதானே நாம் நடந்து போக வேண்டும்? பாரதிராஜாவின் சட்டையை நான் அணிந்துகொண்டு வருகிறேன் எனப் பார்ப்பவர்கள் நினைத்துவிடுவார்களோ’ என யோசனையாக இருந்தது.
அவர் நடிக்கும்போது, என்னுடைய கவனம் அந்தச் சட்டையிலேயேதான் இருந்தது. பிறகு, அந்தக் காட்சி முடிந்ததும் சட்டையைக் கொடுத்துவிட்டார்.
அடுத்தக் காட்சியில் அவரின் கதாபாத்திரம் ஷூ பாலிஷ் செய்து கொண்டிருக்கும். நான் அப்போது அந்தச் சட்டையை அணிந்துவிட்டு நாடக மேடைக்குச் சென்றுவிட்டேன்.
அங்குச் சென்று பாரதிராஜாவிடம் ‘எனக்கு பாலிஷ் போடு’ என்றேன் (சிரித்துக் கொண்டே…). அவர் உடனே, ‘நீ ஏன்டா வந்த’ எனக் கேட்டார்.
நான் அவரிடம், ‘நாளைக்கு இந்தச் சட்டையைப் போட்டுக் கொண்டு போகும்போது, உன் சட்டை எனச் சொல்லிவிடுவார்களே..’ எனச் சொல்லிக் கொண்டு என் செருப்புக்கு பாலிஷ் போடச் சொன்னேன்.” என நகைச்சுவையாகப் பகிர்ந்திருக்கிறார்.