பாரில் தகராறு, இளம் பெண் கார் ஏற்றி கொலை: 4 பிரிவு கீழ் வழக்கு பதிவு  – Kumudam

Spread the love

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இளம் பெண் ஒருவர் மீது கார் ஏற்றி கொலை செய்த கும்பலால் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

போலீஸ் விசாரணை 

சென்னை, கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் FL3 பாரில் நடனமாடும்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு இருதரப்பினரும் பாரின் வெளியே அனுப்பப்பட்ட காரணமாக நிலையில், ஒரு தரப்பைச் சேர்ந்த 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு தரப்பைச் சேர்ந்த நபர்கள் காரில் சென்று மேற்படி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட,  மற்றொரு பெண் KMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையர் (ஆயத்தீர்வை) அவர்கள் விசாரணை மேற்கொண்டு, மேற்படி சம்பவம் தொடர்பாக K-11 CMBT காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், அமைதிக்காகவும் மேற்படி FL 3 பாரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, மேற்படி பார் சீல் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மேற்படி பார் சீல் வைக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம் 

சென்னை கோயம்பேடு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இறந்த பெண்ணின் உடன் பைக்கில் சென்ற இளைஞர் அஸ்வத் என்பவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. 

அதில், தாங்கள் 4 பேர் ஒரே பைக்கில் சென்தாகவும் அப்போது காரை வேகமாக ஓட்டி வந்து முதலில் இடித்ததாகவும் பிறகு ஆனால் கீழே விழவில்லை என்பதால் 2 முறையாக இடித்து தள்ளிவிட்டு சென்றனர். இதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேறொரு கும்பல் தான் கல் வீசி தாக்கியது. ஆனால் நாங்கள் தான் நினைத்து கொலை செய்து விட்டு தப்பினர்” என்று அஸ்வத் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

4 பிரிவு கீழ் வழக்கு 

சென்னை கோயம்பேடு மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக  முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.  8 பேர் மீது சிஎம்பிடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். BNS 103, 115(2), 351(3), 109(1) என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காயம் ஏற்படுத்துதல், படுகாயம் ஏற்படுத்துதல், கொலை, கொலை முயற்சி என 4 பிரிவுகளில் சிஎம்பிடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.  இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *