பாலியல் வன்கொடுமை வழக்கு; ஜாமீனில் வந்து அதே சிறுமியை மீண்டும் கூட்டு பாலியல் கொடுமை செய்த கொடூரன்!

Spread the love

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறைக்குச் சென்றவர், ஜாமீனில் வந்து மீண்டும் அச்சிறுமியை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம், லட்சுமேஷ்வர் வட்டாரத்திலுள்ள ஒரு ஊரில் குடும்பத்தினருடன் வசித்து பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த 23 வயதான அல்லாபக்‌ஷி என்பவர் கண்காணித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அச்சிறுமியை வாகனத்தில் மலைப்பகுதிக்கு கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி, நடந்ததை பெற்றோரிடம் கூற, லட்சுமேஷ்வர் போலீஸில் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அல்லாபக்ஷியை போக்சோ வழக்கில் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போக்சோ
போக்சோ

இந்நிலையில் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த அல்லாபக்‌ஷி, தன் மீது புகார் கொடுத்த சிறுமியை பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு தொடர்ந்து சிறுமியைக் கண்காணித்து வந்தவர், கடந்த 23 ஆம் தேதி கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்குச் சென்று சிறுமியை தன் நண்பன் ஆசிஃப்புடன் பின் தொடர்ந்து சென்று கடத்திச் சென்றுள்ளார்.

காட்டுக்குள் இருந்த வீட்டிற்கு கொண்டு சென்று நண்பனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி, தனக்கு ஏற்பட்ட கொடுமையை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். பதறிய பெற்றோர் மீண்டும் லட்சுமேஷ்வர் போலீஸில் புகார் செய்ய, தலைறைவான அல்லாபக்‌ஷி, ஆசிஃப்பை போலீஸார் விரைந்து கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *