நாகர்கோவிலைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா பணம், நகைகளைக் காண்பித்து வீடியோ பதிவிடுவது வழக்கம். குழந்தைக்கு பண குளியல் நடத்துவது, நகைகள் வாங்க செல்வது என அனைத்தையும் வீடியோவாகப் பதிவிட்டுவந்தார்.
இந்த நிலையில் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் உள்ள மதுமிதா வீட்டில் இருந்து சுமார் 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் இசக்கி பாண்டி உள்பட 4 பேரை ராஜாக்கமங்கலம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 98 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.
மதுமிதாவின் வீடியோக்களைப் பார்த்து அவரது வீட்டை அடையாளம் கண்டு நகைகளைக் கொள்ளையடித்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் 5 சவரன் நகை திருடியதாக மதுமிதா மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கே.டி.சி நகர் பகுதியைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டரான பேச்சிமுத்து என்பவர் நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது திருட்டு புகார் அளித்துள்ளார். பேச்சிமுத்துவின் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
முதுகுவலிக்காக பிசியோ தெரபி சிகிச்சைக்காக அடிக்கடி திருநெல்வேலி செல்வது வழக்கம். அப்போது, நாகர்கோவில் தம்பத்துகோணம் பகுதியைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா அறிமுகமானார். அவர் அடிக்கடி செல்போனில் பேசுவார்.

கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி நீதிமன்றம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வருமாறும், தன்னை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றும் மதுமிதா கூறினார். அங்கு சென்றபோது மதுமிதா எனது காரில் ஏறினார். அதன் பிறகு என்னிடம் பிசியோதெரபி செய்துகொள்ளும்படி கூறினார். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன்.