பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார் – Kumudam

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை நகைச்சுவையோடு திரைக்கதையாக அமைப்பதில் வல்லவர் என்பதால், இவர் “திரைக்கதை மன்னன்” என்று பரவலாக அழைக்கப்படுகிறார்.

1953-ம் ஆண்டு 7 ம் தேதி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திற்கு அருகிலுள்ள வெள்ளாங்கோயில் பிறந்தவர். இவருக்கு தற்போது 74 வயது ஆகிறது. பிரபல இயக்குநர் பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 

1979 ஆம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் மற்றும் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகப் பங்களித்துள்ளார்.ஒரே படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை எனப் பல துறைகளையும் கையாண்டு அசத்தியவர்.

முந்தானை முடிச்சு (1983) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், 2014 இல் SIIMA-வின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வென்றார்.”பாக்யா” என்ற வார இதழின் ஆசிரியராகவும், நாவலாசிரியராகவும் இருந்து வந்தார். 

பாக்யராஜ்க்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஆயிரம் விளக்கு அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த மரணம் திரையுலகில் கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *