பிரேக்அப் செய்த லிவ்-இன் காதலி; வீடியோ கால் செய்து வளர்ப்பு நாய்களை செங்கலால் அடித்து கொன்ற காதலன் |Man kills ex-girlfriend’s two pet dogs; shoots them while on a video call with her

Spread the love

கொல்கத்தாவின் பிஜய்கர் பகுதியில் வசித்து வந்தவர் சஞ்சிப் பட்டாச்சார்யா. அவர் டிஜே பரினோவா என்ற பெண்ணுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பரினோவா அங்கிருந்து வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்தார். ஆனால் பரினோவா தனது இரண்டு செல்ல நாய்களை சஞ்சிப் பராமரிப்பில் விட்டு சென்று இருந்தார்.

திடீரென சஞ்சிப் அந்த பெண்ணுக்கு வீடியோ கால் செய்ததார். அப்போது பரினோவாவின் நாய் ஒன்று கயிற்றில் தொங்குவதை பார்த்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அதே பகுதியில் வசிக்கும் தனக்கு தெரிந்த ஒருவரை தொடர்பு கொண்டு சஞ்சிப் இல்லத்திற்கு சென்று பார்க்கும்படி பரினோவா கேட்டுக்கொண்டார்.

அந்த நபர் அங்கு வந்து பார்த்தபோது, ​​ சஞ்சிப் பிளாட் முழுவதும் ரத்தம் சிதறிய நிலையில், இரண்டு நாய்களும் இறந்து கிடந்ததைக் கண்டார். இது குறித்து பரினோவா விலங்குகள் நல ஆர்வலர் டெப்லினாவிற்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் நடிகையும், விலங்கு நல ஆர்வலருமான டெப்லினா தத்தா சம்பவ இடத்திற்கு வந்தார்.

சஞ்சிப், பரினோவா

சஞ்சிப், பரினோவா

விலங்குகள் நல அமைப்புகளின் உறுப்பினர்களுடன் சேர்ந்து, கொல்லப்பட்ட நாய்களை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும் அவற்றை கொலை செய்த நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். இதுதொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் அக்னிமித்ரா பாலியை தொடர்பு கொண்டு, இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க டெப்லினா வலியுறுத்தினார். புகாரின் பேரில், ஜாதவ்பூர் ஸ்டேஷன் போலீசார் வீட்டிற்கு வந்து, சஞ்சிப்பை விசாரணைக்காக காவலில் எடுத்து பின்னர் கைது செய்தனர்.

நாய்கள் செங்கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். நாய்களில் ஒன்று உள்ளூர் இனத்தைச் சேர்ந்தது, மற்றொன்று பீகிள் என்று கூறப்படுகிறது. இரண்டு நாய்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *