பிறந்தது UAE-யில் தான்.. ஓமன் துணை விமானி யார்? பயங்கரவாத சகவாசம் எப்படி வந்தது? திடுக் தகவல் | Dubai – Tel Aviv Flight: Who is Oman co pilot Hamam al Hammami? details here

Spread the love

International

oi-Nantha Kumar R

துபாய்: துபாய் – டெல்அவிவ் விமானத்தில் இந்திய விமானியை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்று கைதாகி உள்ள ஓமன் நாட்டின் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி பற்றி அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முழுவிவரம் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி எப்போது அவர் பயங்கரவாதத்துக்கு துணைபோக தொடங்கினார்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

dubai-tel-aviv-flight-who-is-oman-co-pilot-hamam-al-hammami-details-here

கடந்த 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு புறப்பட்ட ‘ஃப்ளைதுபாய்’ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. 174 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என்று 180 பேர் பயணித்தனர். விமானத்தை இயக்கிய ஓமன் துணை விமானி ஹமிம் அல்ஹமாமி, இந்திய கேப்டனான பைலட் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு விமானத்தை கடத்தி அனைவரையும் கொல்ல முயன்றார். ஆனால் இது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறந்ததால் பயணிகள் சேர்ந்து ஓமன் துணை விமானியை சிறைபிடித்தனர். அதன்பிறகு விமானத்தில் பணி முடித்து டெல்அவிவ்விற்கு திரும்பி கொண்டிருந்த 2 விமானிகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபுக் பத்திரமாக தரையிறக்கினர்.

ஓமன் துணை விமானி ஹமிம் அல்ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஓமன் துணை விமானி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓமன் துணை விமானியின் பெயர் ஹமாம் அல்ஹமாமி. இவர் ஓமன் நாட்டின் குடிமகன் ஆவார். இவரது தந்தை ஓமன் நாட்டை சேர்ந்தவர். தாய் சிரியா நாட்டை சேர்ந்தவர். ஹமாம் அல் ஹமாமியின் பெற்றோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்தபோது இவர் பிறந்தார். தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது. முதலில் அவர் தனது பெற்றோருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்தார்.

அதன்பிறகு சொந்த நாடான ஓமனுக்கு சென்றார். இதையடுத்து தாயின் சொந்த நாடான சிரியாவில் சிறிது காலம் வசித்ததோடு, மொராக்கோவிலும் வசித்தார். தற்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசித்து வருகிறார்.

இவர் சிரியாவில் இருந்தபோது தான் மதஅடிப்படைவாதியாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபடவும் தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது 14 வயதில் இருந்து 21 வயது வரை சிரியாவில் வசித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த காலத்தில் அவர் எங்கு இருந்தார்? எவ்வளவு காலம் இருந்தார்? யாருடன் தொடர்பில் இருந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

இதனால் சிரியாவில் தான் அவரை பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இங்கு ஏற்பட்ட மாற்றம் தான் செப்டம்பர் 30ம் தேதி துபாய் – டெல்அவிவ் விமானத்தில் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கொடூர தாக்குதல் நடத்தி விமானத்தை கடத்தி 174 பயணிகள் உள்பட 180 பேரையும் கொல்ல துணிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹமாம் அல் ஹமாமி 2018 ம் ஆண்டில் ஓமன் அவியேஷன் நிறுவனத்தில் பணக்கு சேர்ந்தார். இங்கு அவர் 7 ஆண்டுகள் வரை பணியாற்றினார். 2025 பிப்ரவரி மாதம் வரை இந்த நிறுவனத்தில் தான்இருந்தார். ஓமன் அவியேஷன் நிறுவனத்தில் பணியாற்றியபோது அவர் பிரிட்டனில் உள்ள பக்கிங்காம்ஹர் நியூ பல்கலைக்கழகத்தில் அவியேஷன் மேனேஜ்மென்ட் டிப்பைமுயம் முடித்தார். 3 ஆண்டு கால இந்த படிப்பை தொலைதூர கல்வி வழியாக கற்று 2023ம் ஆண்டில் முடித்தார்.

இவரது வாழ்வில் திருப்பு முனை ஏற்பட்ட ஆண்டு 2024 தான். அப்போது அவரது பேச்சுக்கள் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவம், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதும் தெரியவந்தது. மேலும் பயங்கரவாத செயல்கள் தொடர்பான ஆவணங்கள் அவரிடம் சிக்கியத. இதனால் அவர் விமானி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஓமனில் அவர் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் நிறுவனத்தில் நிர்வாக பணிக்கு அவர் மாற்றப்பட்டார்.

அதன்பிறகு அவர் ஓமன் அவியேஷன் நிறுவனத்தில் இருந்து 2025 பிப்ரவரி மாதம் வெளியேறினார. 4 மாதங்கள்கழித்து அவர் மொராக்கோவிற்கு சென்றார். அங்கு ராயல் ஏர் மரோக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 7 மாதம் பணி செய்தார். பிறகு அங்கிருந்து வெளியேறி ஐக்கிய அரபு அமீரகம் வந்தார். 2026 ஜனவரியில் துபாயில் தங்க தொடங்கிய அவர் ‘ஃப்ளைதுபாய்’ நிறுவனத்தில் 8 மாதங்களுக்கு முன்பு பணிக்கு சேர்ந்தார். பர்ஸ்ட் ஆபிசராக அவர் பணி செய்து துபாய் – டெல்அவிவ் விமானத்தை கடத்த முயன்று தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *