பிஸ்லரி தண்ணீர் பாட்டில் ‘பாதுகாப்பற்றவை’ என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
“ஆய்விற்காக பிஸ்லரி நிறுவனத்தின் வளாகத்திலிருந்து ‘தொகுக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர் தவிர்த்த)’ என்ற வகையின் கீழ், சட்டப்பூர்வ மாதிரி ஒன்று சேகரிக்கப்பட்டது.
அந்த மாதிரியில் நிர்ணயிக்கப்பட்ட புரோமேட் அளவுகள் பொருந்தாமல் இருந்ததால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் அது ‘பாதுகாப்பற்றது’ என அறிவிக்கப்பட்டது.
உணவு வணிக இயக்குநரின் மேல்முறையீட்டின் பேரில், அந்த மாதிரி பரிந்துரை உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது; அங்கு பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பது கண்டறியப்பட்டதால், அது பாதுகாப்பற்றது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வக முடிவுகளின்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் பாதுகாப்பற்ற உணவை விற்பனை செய்தல் தொடர்பான விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டன.