"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" – ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?

Spread the love

அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி – வருந்தும் சொந்த கிராம மக்கள்

இப்படியொரு தலைப்பில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி விகடன் தளத்தில் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம்.

அமைச்சர் ஜெகதீவரியின் சொந்த ஊரான பனைவிளையில் ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றை அமைச்சரது உறவினர்கள் ‘இனி அது ஊர்க் கிணறு இல்ல, எங்களோடது’ எனச் சொன்னது குறித்த செய்தி.

விகடனில் செய்தி வெளியானதும் டிவி சேனல்கள் பல இந்தச் செய்தியை வெளியிட்டன. தொடர்ந்து விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனது. போலீஸ் அமைச்சர் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அந்த விவகாரம் அப்படியே அமுங்கியும் விட்டது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி

ஆனால் இந்த விவகாரம் குறித்து அப்போது மீடியாவில் பேட்டி அளித்த மாரிமுத்து குடும்பத்தினர் மீது அப்போதிருந்தே அமைச்சரது குடும்பத்தினர் வன்மத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாரிமுத்துவுக்குச் சொந்தமான ஆடுகள் சில திடீர் திடீரென இறந்து வந்திருக்கின்றன.

முதலில் காரணம் தெரியாமல் இருந்திருக்கிறார் மாரிமுத்து. ஆனால் ஒரு கட்டத்தில் சுந்தரவேல் என்பவரும் அவரது மகன் ராஜகோபாலும் சேர்ந்தே மாரிமுத்துவின் ஆடுகளை அடித்துக் கொன்றதை சிலர் மூலம் தெரிந்து கொண்ட மாரிமுத்து தட்டார்மடம் போலீஸில் புகாரும் தந்திருக்கிறார்.

சுந்தரவேல் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

மாரிமுத்துவின் புகார்

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் பனைவிளைக்கு வந்து அமைச்சர் வீட்டுக்குச் சென்று விட்டு அப்படியே சென்று விட்டார்களாம்.

,மாரிமுத்துவிடம் பேசிய போது, ‘சம்பந்தப்பட்டவங்க யாருனு பெயரைக் குறிப்பிட்டுப் புகார் கொடுத்தும் கூட போலீசார் நியாயமா நடந்துக்க மாட்டேங்குறாங்க. அமைச்சர் தரப்புக்குச் சாதகமா செயல்படறாங்க. எனக்கு இதுவரை அஞ்சு ஆடுகள் இறந்திருக்கு. கிணறு விவகாரம் தொடர்பா ஊர்ல பலர் மீடியாவுல பேசினாங்க. என் மனைவியும் அதுல ஒருத்தர். அந்த ஒரு காரணத்துக்காக வாயில்லா ஜீவன்களைச் சாகடிச்சிருக்காங்க. போலீசாரும் இது மேல நடவடிக்கை எடுக்கலைன்னா நான் நியாயத்துக்கு எங்கதான் போறது’ எனக் குமுறுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *