தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
விஜய்யின் இந்த அதிரடி வெற்றிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா விஜய்க்குத் தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “விஜய் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
தமிழக மக்கள் இவ்வளவு திரளாக வந்து வாக்களித்து, தங்களுக்கான ஒரு நிலைப்பாட்டை உறுதியுடன் எடுத்தமைக்கு எனது பாராட்டுகள்.
தமிழக மக்களுக்கும், புதிய முதலமைச்சருக்கும் அனைத்து வளங்களும், வளர்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
தமிழக அரசியலின் இந்தப் புதிய முகத்தையும், புதிய பரிமாணத்தையும் காண ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.