சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ், புதிய “ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 2026′-ஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. இது EPF திட்டம், 1952-க்கு மாற்றாகும்.
இந்தப் புதிய திட்டத்தின் படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் சில முக்கிய காரணங்களுக்காக தங்களது வைப்பு நிதி கணக்கில் இருந்து பகுதிப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பகுதி பணம் என்றால், ஊழியர்கள் தங்களக்கு தகுதியான மொத்தப் பிஎஃப் தொகையில் (Eligible Member Balance) 75 சதவிகித பணத்தை முக்கிய தேவைகளுக்காக எடுத்துகொள்ளலாம்.
மீதி 25 சதவிகித தொகையை கட்டாயம் பி.எஃப் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
அதாவது, ஒருவருக்கு பிஎஃப் கணக்கில் தகுதியான தொகையாக ₹1 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
புதிய திட்டத்தின் படி, இதில் ரூ.25,000-ஐ பி.எஃப் கணக்கிலேயே எப்போதும் வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள ரூ.75,000 தொகையை தற்போதைய விதிகளுக்கு உட்பட்டு பகுதிப் பணமாக எடுத்துக்கொள்ள முடியும்.