`புதுச்சேரி காவல்துறை என் குடும்பத்தினரை மிரட்டுகிறது!’ – CJP சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

Spread the love

அமித்ஷா மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின்போதே என்னை அச்சுறுத்தும் நடவடிக்கை குறித்து திட்டமிடப்பட்டதா? என்னை அச்சுறுத்தி மௌனமாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது ஒருபோதும் பலனளிக்காது.

என்னை மிரட்டி அமைதியாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது என்னை ஒருபோதும் அச்சப்படுத்தாது. மாறாக, இது சிறந்த நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கான எங்களது உறுதியை மேலும் வலுப்படுத்தும்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் கைலாஷ்நாதன்

உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் கைலாஷ்நாதன்

காவல்துறை சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பாக செயல்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதற்குப் பதிலாக ரவுடிகளைப் போன்று செயல்படக் கூடாது” என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து புதுச்சேரி காவல்துறை, அவருக்கு விளக்கம் அளித்திருக்கிறது.

அதில், `சுதந்திர தினத்தை முன்னிட்டு விஐபி-க்கள் வருகை தரும் பகுதிகளில் உள்ள வீடுகளில் வழக்கமான பாதுகாப்பு விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாரையும் அவர்கள் வீட்டிற்குள் சென்று போலீஸார் விசாரணை செய்யவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் வசிப்பவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதை அச்சுறுத்தல் என்று கூறுவது தவறானது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *