புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

Spread the love

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு சென்ற வில்லியனூரைச் சேர்ந்த ரௌடி வினோத், இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் தனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அத்துடன் அந்தப் பகுதியிலுள்ள மற்ற கடைகள் அனைத்திலும் மாமூல் வசூலித்து தன்னிடம் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி, இரவு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் ரௌடி வினோத்.

சேதமடைந்தப் பொருட்கள்

சேதமடைந்தப் பொருட்கள்

அதன்படி மீண்டும் இரவு 8.30 மணிக்குச் சென்ற ரௌடி வினோத், பாபுவிடம் மாமூல் கேட்டிருக்கிறார். ஆனால் பாபுவும், ராஜேந்திரனும் அதற்கு மறுத்ததுடன், போலீஸாரிடம் புகாரளிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர். அதற்கு, `போலீஸ்னா பயந்துடுவேனா… அவங்களே எனக்கு பயப்படுவாங்க.

எம்.எல்.ஏ, முதலமைச்சர்னு நீ யாருகிட்ட வேணும்னாலும் போ. எனக்கு எந்த பயமும் இல்ல. எனக்கு மாமூல் வசூலிச்சிக் குடுக்காம நீ எப்படி தொழில் செய்வாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாகச் சென்றிருக்கிறார் வினோத். சிறிது நேரத்தில் திரும்பி வந்து ஒரு பையில் இருந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *