இரண்டாம் பாகத்தை, விபின் தாஸின் உதவி இயக்குநர் சவின் இயக்கியிருந்தார். மூன்றாம் பாகத்தையும் விபின் தாஸின் உதவி இயக்குநரான விஸ்வன் ஸ்ரீஜித் இயக்குகிறார்.
முதல் இரண்டு பாகங்களில் ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்திக் கதை நகர்ந்திருந்தது. மூன்றாம் பாகத்தில் பெண் கதாபாத்திரங்களை முதன்மையாக அமைத்திருக்கிறார்களாம். அதன்படி, மூன்றாம் பாகத்திற்கு ‘பயோபிக் ஆஃப் பில்லியன் கேர்ள்ஸ்’ என டேக்லைன் வைத்திருக்கிறார்கள்.
மூன்றாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட ‘வாழ’ பிரான்சைஸ் திரைப்படங்களின் கதாசிரியர் விபின் தாஸ், “வாழ தொடர் நாங்கள் நினைத்ததை விடப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.
சினிமாவுக்குப் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இதனைத் தொடங்கினோம். வரும் காலங்களிலும் அதே கொள்கையைத் தொடருவோம்.
எழுத்து, இயக்கம், நடிப்பு அல்லது இசை என எந்தத் துறையாக இருந்தாலும், திறமையாளர்களுக்கு எப்போதும் கதவு திறந்திருக்கும் ஒரே தொடர் இதுதான். இந்த தலைப்பும் ரசிகர்களுமே எங்களின் பலம்.
ரசிகர்களின் அமோக ஆதரவு மற்றும் ஆலோசனைகளை ஏற்று ‘வாழை 3 – பில்லியன் பெண்களின் பயோபிக்’ (Vaazha 3 – Biopic of a Billion Girls) படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
எப்போதும் போலவே, எனது இயக்கக் குழுவில் முக்கியப் பங்காற்றிய விஸ்வன் ஸ்ரீஜித் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.