“Silent Influencer’ என்ற ஆல்பம் வெளியீட்டில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் முதல்வர் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.
” நம்பிக்கை வாக்கெடுப்பில் மீண்டும் மாபெரும் வெற்றியை அவர் நிரூபித்துக் காண்பித்திருக்கிறார்.
நமது மாண்புமிகு முதல்வர், கலை உலக சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்தும் முடியாததை, முதல் முயற்சியிலேயே சாதித்த ஒரு முதல்வராக இன்றைக்கு விஜய் அவர்கள் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
புரட்சி தலைவர் விஜய்க்கு பிறகு விஜய் தான் அதனை சாதித்துக் காட்டியிருக்கிறார். நிறைய பேர் இதை ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுவார்கள்.