பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை | Delivery man trespasses into house to use restroom and exposes his private parts to woman

Spread the love

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வசிக்கும் 30 வயது பெண் ஒருவர் வாடகை புதுப்பிப்பு அக்ரிமெண்ட் ஒன்றை டெலிவரி செய்ய ஏற்பாடு செய்து இருந்தார்.

அந்த ஆவணங்களை டெலிவரி பாய் அப்பெண் வீட்டிற்கு எடுத்து வந்தார். வீட்டில் அப்பெண் மட்டும் தனியாக இருந்தார். அப்பெண்ணிடம் தான் கொண்டு வந்த பொருளை டெலிவரி செய்ய ஒ.டி.பி. கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதோடு கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

போனை எடுப்பதற்காக அப்பெண் வீட்டிற்குள் சென்றார். இச்சமயத்தில் டெலிவரி பாய் வீட்டிற்குள் சென்று கழிவறைக்குள் நுழைந்தார். ஆனால் உள்ளே நுழைந்த டெலிவரி பாய் கழிவறையிலிருந்து வெளியில் வரும்போது தனது உடையைக் கழற்றிய நிலையில் அந்தரங்க உறுப்பை அப்பெண்ணிற்குக் காட்டியபடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் வெளியில் ஓடி வந்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிவித்தார்.

உடனே அவர்கள் மகேஷ் என்ற அந்த டெலிவரி பாயை பக்கத்து வீட்டுக்காரர்களும், கட்டிட வாட்ச்மெனும் சேர்ந்து பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “‘என்னிடம் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். நான் போனை எடுக்க சென்ற நேரத்தில் உள்ளே நுழைந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *