பெட்ரோல் பங்க் ஊழியருடன் பழக்கம்.. அண்ணினு கூட நினைக்காத கொழுந்தன்! உடலை எரித்த கணவர், மாமியார் | Tenkasi Petrol Bunk Affair.. Brother-in-Law Kills Woman, Husband and Mother-in-Law Burn Her Body

Spread the love

Tamilnadu

oi-Hema Vandhana

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்த சம்பவத்தில் அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் அடையாளம் தெரியாத பெண்ணாகக் கருதப்பட்ட அவர், கடையநல்லூரைச் சேர்ந்த 33 வயது குட்டிமாரி என்பது தெரியவந்துள்ளது. அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகக் கணவர், கொழுந்தன், மாமியார் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை – சுந்தரபாண்டியபுரம் சாலையில் மாரியப்பன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு வாழை மற்றும் பூசணி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

surandai

தென்காசி மாவட்டம்

இந்த நிலையில், நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் தோட்டத்திற்குள் பெண் ஒருவர் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுரண்டை போலீசார், பெண்ணின் உடலைப் பார்வையிட்டனர்.

ஆனால், உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு மொத்தமாக எரிந்திருந்ததாம்.. உடலின் பெரும்பகுதி கருகியிருந்தது.. தலை மற்றும் 2 கால்களின் பகுதிகள் எலும்புகளுடன் காணப்பட்டது..

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் பெண்ணின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அடையாளம் தெரிந்தது எப்படி?

முதலில் அந்தப் பெண் யார் என்பது போலீசாருக்குத் தெரியவில்லை. இதனால், அவரது அடையாளத்தைக் கண்டறியவும், கொலைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளவும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில், கொலை செய்யப்பட்ட பெண் கடையநல்லூர் புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த குட்டிமாரி (33) என்பது தெரியவந்தது. இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முருகன் (45) என்பவரின் மனைவி ஆவார்.

முருகன் கடையநல்லூர் பகுதியில் தங்கி பிளாட்பாரங்களில் துணி வியாபாரம் செய்து வந்துள்ளனர். முருகனின் தம்பி ரவி (40), தாயார் சிவகாமி ஆகியோரும் முருகனுடனேயே தங்கி வியாபாரம் பார்த்து வந்துள்ளனர்.

வாழை தோப்பு குட்டிமாரி

ஆனால் குட்டிமாரி மட்டும் கடையநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் சுரண்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, பெட்ரோல் பங்க்குக்கு சென்று வந்துள்ளார்.. அப்போதுதான் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஒருவருக்கும், குட்டிமாரிக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது..

இந்த விஷயம் கணவர் முருகனுக்கு தெரிந்து கொந்தளித்துள்ளார்.. கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லையாம்.., சில நாட்களில் குட்டிமாரியின் இந்த கள்ள உறவு, முருகனின் தம்பி ரவிக்கும் தெரியவந்துள்ளது.

சுரண்டை பெட்ரோல் பங்க்

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கடையநல்லூரில் பெட்ரோல் பங்க் வேலையை முடித்துவிட்டு குட்டிமாரி, சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவிக்கும் குட்டிமாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. குட்டிமாரியுடனான பழக்கத்தை கைவிடுமாறு ரவி கூறியுள்ளார். ஆனால், குட்டிமாரி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த மைத்துனர் ரவி, அண்ணி குட்டிமாரியின் கழுத்தைத் துண்டால் நெரித்துக் கொன்றுள்ளார்.

பிறகு, கொலையை மறைக்க ரவி தனது அண்ணன் முருகன் மற்றும் அம்மா சிவகாமியின் உதவியை நாடியுள்ளார். 3 பேரும் சேர்ந்து குட்டிமாரியின் உடலை சுரண்டை அருகே உள்ள வாழைத்தோட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளனர். கொலை செய்தது வெளியே தெரியாமல் இருக்கவே உடலை எரித்தாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளனர்.

வாழைத்தோப்பு ஆள் நடமாட்டம்

இதையடுத்து ரவி, முருகன், சிவகாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் இப்போது ஜெயிலில் உள்ளார்கள்.

நேற்று முன்தினம் மாலை வரை அந்த வாழைத் தோட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததாம்.. அதனால் இரவு நேரம்வரை சடலத்துடன் காத்திருந்து, அதற்குபிறகு ஆள் நடமாட்டம் இல்லாதபோது சடலத்தை எரித்தார்களாம்.. இந்த சம்பவம் சுரண்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *