பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து- கார் மோதி பெண் உள்பட 4 பேர் பலி! 3 பேர் படுகாயம் | 4 died in Trichy – Chennai national highway

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் தரைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்றின் பின்னால் கார் மோதியதில் 4 பேர் பலியாகிவிட்டனர். 2 பெண்கள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சிலர் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

perambalur accident

அப்போது பெரம்பலூர் அருகே துரைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காளீஸ்வரன், பிரபாகரன், கார்த்தி, அவரது மனைவி சூர்யா ஆகிய 4 பேர் பலியாகிவிட்டனர். 2 பெண்கள் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருக்குள் சிக்கி பலியான உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜசீலனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது இது போன்ற அசம்பாவிதம் நடந்து 4 உயிர்கள் பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *