‘பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வெல்வாரா?’ – களநிலவரம் என்ன? |Can TVK Chief Vijay Secure Victory in Perambur? A Ground Report on the Election Scenario”

Spread the love

இது தொகுதி மக்களுக்கு அவர்களிடம் ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துகிறது. பாமகவுக்கு தொகுதியில் பலமே இல்லையென்றாலும் திலகபாமா ஆக்டிவாக பிரசாரம் செய்கிறார். தொகுதியின் பிரச்னைகளையும் சரியாக தொட்டு பேசுகிறார். மேலும், ‘விஜய் ஏன் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்? பெரம்பூர் மக்கள் மீது நம்பிக்கையில்லையா? இவர் வெற்றிப் பெற்றால் பெரம்பூரை ராஜினாமா செய்து மக்களை கைவிட்டு விடுவார்’ என சரியான பாயிண்டை பிடித்து பேசுகிறார். திலகபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லையென்றாலும், விஜய்யின் வெற்றி வாய்ப்பில் சேதாரத்தை ஏற்படுத்தும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.

அதேமாதிரி, தொகுதிக்குள் திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் மீது நல்ல அபிப்ராயம் இல்லையென்றாலும் அவர்களும் கவனமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். விஜய்யை பற்றிய விமர்சனங்களை கவனமாக தவிர்க்கின்றனர். தங்களின் கட்டமைப்புப் பலத்தை நம்பி, சில நூறு வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என போட்டு அரசின் நலத்திட்டங்களையும் தேர்தல் அறிக்கையையும் முன்வைத்து தீவிரமாக கேன்வாஷ் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் விஜய் எளிதாக பெரிய வித்தியாசத்தில் வெல்ல முடியும் என நினைப்பது தவறு. எஞ்சியிருக்கும் நாட்களில் மக்களின் பல்ஸை உணர்ந்து லோக்கல் விஷயங்களை முன்வைத்து பிரசாரம் செய்வது மட்டுமே விஜய்யின் வெற்றிக்கு உதவும்’ என்கின்றனர்.

பெரம்பூரில் 2,22,000 வாக்குகள் இருக்கிறது. கடந்த முறை ஆர்.டி.சேகர் 1,05, 267 பெற்று வென்றிருந்தார். இந்த முறை தவெக விஜய்க்காக அதே 1 லட்சம் வாக்குகளை டார்கெட்டாக நிர்ணயித்திருக்கிறது. விஜய் பெரம்பூரை கைப்பற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *