பெரம்பூர்: பிரசித்தி பெற்ற கோயில் எதிரே தொந்தரவாய் டாஸ்மாக்; பட்டியல் `717’லிருந்து தப்பியது எப்படி?

Spread the love

`பள்ளிக் கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைந்திருக்கும் மதுபானக் கடைகள் அங்கிருந்து உடனடியாக அகற்றப்படும்.” – தவெக அரசு பதவியேற்ற அடுத்த சில தினங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார், முதல்வர் விஜய். பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்த அறிவிப்பு. அடுத்த ஓரிரு வாரங்களில் ‘717 கடைகள் என இந்த வகையில் தமிழ்நாடு முழுக்க அகற்றப்பட்டுள்ளன’ என ஒரு பட்டியலையும் வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.

ஆனால் தற்போதும் பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்களிலிருந்து அரசு அறிவித்த 500 மீட்டர் தூர லிமிட்டுக்குள் இருக்கும் கடைகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.

டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் இது குறித்துக் கேட்டதற்கு, “முக்கியமான ஆலயங்கள், பள்ளிகளின் அருகே இருக்கும் கடைகள் ஓரளவு அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் இன்னும் சில இடங்களில் பள்ளி, கோயில்களின் அருகே கடைகள் இருக்கவே செய்கின்றன. இன்னும் கடைகள் அகற்றப்பட வேண்டுமா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என பதில் தருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் தொகுதியான சென்னை பெரம்பூரிலேயே பிரசித்தி பெற்ற ஓர் ஆலயத்தின் முன் இருக்கும் டாஸ்மாக் கடை சமீபத்தில் அகற்றப்பட்ட 717 கடைகளின் பட்டியலில் இடம் பெறாமல் இன்னும் அதே இடத்தில் இயங்கி வருவது, அந்தப் பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.

மூலக்கடையிலிருந்து பெரம்பூர் ரயில் நிலையம் செல்லும் வழியிலிருக்கிற லட்சுமியம்மன் ஆலயம்தான் அது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கோயில், இந்தப் பகுதியில் வெகு பிரசித்தம் பெற்றது என்கிறார்கள். வருடா வருடம் ஆடி மாதம் இந்தக் கோயிலில் நடக்கும் தீமிதி திருவிழா இந்தப் பகுதி மக்களிடையே பெரிய ஆன்மிக விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுக்கவே பக்தர்கள் திரளாக இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இரண்டாவது வாரம் கூழ் வார்த்தலில் தொடங்கி நான்காவது வாரம் தீமிதி திருவிழாவுடன் நிகழ்ச்சி நிறைவடையும்.

இந்த வருடமும் தீமிதி திருவிழாவுக்குத் தயாராகி வருகின்றனர் பக்தர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *