பெருந்துறை இடைத்தேர்தல்: "TVK சரித்திர வெற்றி பெறும்" – சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்

Spread the love

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, இந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

பெருந்துறை இடைத்தேர்தல் குறித்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம். அதன் அடிப்படையில் தூய்மையான ஆட்சியை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். மேலும், நகர்ப்புறத்தைச் சுற்றி 16 கிலோ மீட்டருக்குள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கூடாது என்ற விதியை 4 கிலோமீட்டராகக் குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.

பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை நீங்கியுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம். இந்த இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் என்பதை முதல்வர் முடிவு செய்வார். இந்த இடைத்தேர்தலில் தவெக சரத்திர வெற்றியைப் பெறும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *