பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா – பாட்டி; ஆத்திரத்தால் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

Spread the love

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் பிணமாக மிதந்தது குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியை அவரின் அத்தை சபரிதா என்பவர் கிணற்றில் வீசி கொலைசெய்திருப்பது தெரியவந்தது. உயிரிழந்த சிறுமியின் தாய் மாமா அஜீத், சபரிதாவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று உள்ளது.

சிறுமியை கொலை செய்த அத்தை சபரிகா

சிறுமியை கொலை செய்த அத்தை சபரிகா
உ.பாண்டி

இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் அஜீத் – சபரிதா தம்பதியினர் மீது அஜீத்தின் குடும்பத்தினர் அக்கறை இன்றி இருந்துள்ளனர். மேலும் அஜீத்தின் குழந்தை மீது பாசம் காட்டாத தாத்தா – பாட்டி ஆகிய இருவரும், தங்களது மகளான செல்வியின் குழந்தைகள் மீது அதிக பாசம் காட்டியுள்ளனர்.

இதனால் வெறுப்பில் இருந்து வந்த சபரிதா, சனிக்கிழமை இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி சாய் தீப்தியை தூக்கிச் சென்று கிணற்றில் போட்டுக் கொலை செய்துள்ளார். விசாரணையின்போது போலீஸாரிடம் சபரிதா இதனை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைதுசெய்தனர். மாமியார் மாமனார் மீது இருந்த ஆத்திரத்தில் 5 வயதே ஆன சிறுமியை சீராட்டி பாசம் காட்ட வேண்டிய அத்தையே கொலைசெய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *