பேஸ்புக்கில் போட்ட ஒரு போட்டோ; வெளிச்சத்துக்கு வந்த 12 கோடி ஆண்டுக்கால ரகசியம்; தாய்லாந்து ஆச்சர்யம் | How a Facebook Post Revealed a 120-Million-Year-Old Discovery in Thailand

Spread the love

ஒரு போட்டோவை பேஸ்புக்கில் போட்டா… நண்பர்கள் லைக் போடுவாங்க, கமென்ட் பண்ணுவாங்க, இல்லனா ஷேர் பண்ணுவாங்க.! ஆனா தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் போஸ்ட் பண்ண ஒரு புகைப்படம், 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ரகசியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்குன்னு சொன்னா நம்ப முடியுதா?

அட! ஆமாங்க, தாய்லாந்தின் உடோன் தானி மாகாணத்தில் உள்ள பூ ப்ராபாட் தேசியப் பூங்காவுக்கு 32 வயதான பிச்சாய் பிரதெட்சேனா சென்றிருக்கிறார். அங்க பாறைகளில் சில விசித்திரமான தடங்களைப் பார்த்திருக்கிறார்.

தாய்லாந்து

தாய்லாந்து

அடடே..! இது என்ன தடம்? ஏதோ பார்க்க வித்தியாசமா இருக்கே! இது என்னவா இருக்கும் என்ற சந்தேகம் அவருக்கு வந்திருக்கு. அந்த நேரத்தில நீரோடையில் தண்ணீர் குறைவாக இருந்ததால், பாறைகள் அதிகமாக வெளியே தெரிந்துருக்கு… உடனே அந்தத் தடங்களைப் புகைப்படம் எடுத்து, தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.

அவ்வளவுதாங்க… அந்தப் புகைப்படம் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது! தாய்லாந்தின் கனிமவளத் துறையினர் அதைப் பார்த்துவிட்டு, அந்த இடத்தை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அடுத்த நாளே அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அந்த ஆச்சர்யமான உண்மை தெரியவந்திருக்கிறது.

தாய்லாந்து

தாய்லாந்து

பாறைகளில் இருந்தவை சாதாரணத் தடங்கள் இல்லை! டைனோசர்களின் ஆறு புதைபடிவக் காலடித் தடங்கள்!

அதுவும் சுமார் ‘12 கோடி ஆண்டுகள் பழைமையானவை’! ஒவ்வொரு தடமும் சுமார் 29 சென்டிமீட்டர் நீளமும், 26 சென்டிமீட்டர் அகலமும் கொண்டிருக்கிறது. இந்தத் தடங்களை உருவாக்கியது, இரண்டு கால்களில் நடந்த, பெரும்பாலும் இறைச்சி உண்ணும் தெரோபோட் வகை டைனோசர்களாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, மக்கள் தடங்களை மிதித்துச் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், பாறைகளைத் தோண்டவோ தடங்களைத் தொடவோ கூடாது என்பதற்காகவும் அந்தப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் காலடித் தடங்கள் மூலம் டைனோசர்கள் எப்படி நடந்தன, எப்படி நகர்ந்தன என்பதை ஆராய முடியும் என ஆராய்ச்சி நிபுணர்கள் கருதுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *