சூர்யா – ஜோதிகா தம்பதி, தங்களுடைய 20-வது திருமண நாளைக் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி கொண்டாடினர்.
திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அதனை இந்த தம்பதியினர் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த கொண்டாட்ட நிகழ்வின் காணொளியைச் சூர்யாவும் ஜோதிகாவும் அவர்களுடைய சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்திருக்கிறார்கள்.
அந்தக் காணொளியைப் பதிவிட்டு ஜோதிகா, “தி சீக்குவல்! எங்களது 20 ஆண்டுகால அன்பையும் சண்டைகளையும் கொண்டாடும் வகையில், மீண்டும் ஒருமுறை எடுத்துக்கொண்ட திருமண உறுதிமொழி.
இது திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல. இது குறைபாடுகளையும், விட்டுக்கொடுத்தல்களையும், புரிந்துணர்வையும், தியாகங்களையும், சுயநலமற்ற அன்பையும் கொண்டாடும் விழா.
ஒருவருக்கொருவர் நாம் எப்படி மாறி இருக்கிறோம் என்பதற்கான கொண்டாட்டம். உண்மைக்கு மிகத் தொலைவில் இருப்பது போல் தோன்றிய ஒரு கனவு, இன்று என் வாழ்நாள் முழுமைக்கும் நான் கனவு காணும் ஒரு நிஜமாக மாறியிருக்கிறது!