“பொருளாதார வளர்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம்”- தங்கம் தென்னரசு | dmk thangam thennarasu about parandur airport

Spread the love

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் இல்லை என சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“தமிழ்நாட்டிற்கும் சென்னையினுடைய சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய தொழில் வளர்ச்சிக்கும் அடிப்படையாக எதிர்கால ஆதாரமாக விளங்கக்கூடிய பரந்தூர் விமான நிலையத்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் விதி எண் 55 கீழ் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் சபாநாயகரிடம் கொடுத்திருந்தோம்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

எங்களுடைய விவாதத்தைத் திட்டமிட்டு தடுத்திருக்கிறார்கள்.

இன்று அதனை எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருந்தனர். எல்லா எதிர்கட்சிகளும் பரந்தூர் விமான நிலையத்தின் அவசியத் தேவை குறித்து, பொருளாதார வளர்ச்சி குறித்து எப்படி நாம் விமானப் போக்குவரத்தில் மற்ற மாநிலங்களைவிட இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் எடுத்துரைத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது விவாதிக்க இருந்தோம்.

ஆனால் அவைக் கூடிய உடன் நம் முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். எதிர்கட்சியினர் குரலை முற்றிலுமாக நிராகரித்து இருக்கின்றனர்.

எங்களுடைய விவாதத்தைத் திட்டமிட்டு தடுத்திருக்கிறார்கள். விமான நிலையம் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என எல்லோருக்கும் தெரியும். பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கியமாக விமான நிலையம் அமைந்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *