கடந்த ஜூலை 1ஆம் தேதி தான் தில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் அர்லேகர் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் நலன்கள் குறித்து உள்துறை அமைச்சருக்கு ஏதேனும் கோரிக்கை வைத்தாரா?அல்லது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என ‘ஆலோசனை’ பெற்று வந்தாரா என்று கேள்வி எழுகிறது.
2014ல் ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்ததும், தூய்மை கங்கை திட்டத்தை கொண்டு வந்தனர். நீர்வளத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 2014 முதல் 2026 வரை செலவிடப்பட்ட மொத்த தொகை 26,824.86 கோடி ரூபாயாகும். 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலை கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது.
இது குறித்து வாய் திறப்பாரா பொறுப்பு ஆளுநர்?

காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது, தாமிரபரணியை போற்றுவது ஆகிய கடமைகளை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும். எமது முதல்வர் அவர்கள் அதற்கான திட்டங்களை உத்திகளை மேற்கொள்வார்.
ஆளுநர் முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதை விடுத்து, அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.
தமிழ் வளர்த்த மதுரையில் ‘வசுதைவ குடும்பகம்’ என்று தமிழர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர். புறநானூறு சொல்லும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை.
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆளுமையுள்ள புதிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார்.
தமிழ்நாட்டின் இறையாண்மைக்குள் – நிர்வாகத்துக்குள் ஆளுநர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று ஆளுநருக்கு வன்னியரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.