போதைப்பொருள்: “தவெக கட்சியா இல்ல Narcos கூடாரமா?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி| Udhayanidhi Stalin has commented on the involvement of a TVK functionary in drug trafficking.

Spread the love

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள “மெத்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் தவெக நகரச் செயலாளர் பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.

பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் – பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *