கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்தியது காக்ரோச் ஜனதா கட்சி.
காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் குறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அளித்த தீர்ப்பின் சாராம்சம்…
> குற்றப் பின்னணி உள்ளவர்களைத் தவிர, மற்ற போராட்டக்காரர்கள் மீது எவ்விதக் கடுமையான அல்லது கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இருப்பினும், எஃப்.ஐ.ஆர் மீதான விசாரணைக்கு எவ்விதத் தடையும் இல்லை.
> போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.
> போராட்டக்காரர்களின் டிஜிட்டல் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் கசியாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
> அனைத்து சிசிடிவி (CCTV) காட்சிகள், ட்ரோன் பதிவுகள், பாடி கேமரா பதிவுகள், வயர்லெஸ் உரையாடல்கள், பிசிஆர் (PCR) அழைப்புப் பதிவுகள் ஆகியவைப் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.