‘போர் நேற்றே முடிந்திருக்க வேண்டும்’ – ஜெலன்ஸ்கி கூறியது என்ன?|’This War Should Have Ended Yesterday’: Zelenskyy

Spread the love

ரஷ்யா – உக்ரைன் போர் நேற்றே முடிந்திருக்க வேண்டும் என்றும், இந்தப் போர்நிறுத்தம் குறித்தும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் பேசியிருப்பதாவது…

“தற்போதைய பேச்சுவார்த்தைக் குழு இந்தப் போரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது என்று நான் நம்புகிறேன்.

எங்களைப் பொறுத்தவரை, இந்தப் போர் நேற்றே முடிந்திருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம்.

ரஷ்யா, உக்ரைன்

ரஷ்யா, உக்ரைன்

ரஷ்யர்கள் பழைய வரலாற்றுக் கதைகளையே பேசிக்கொண்டிருந்தால்…

என்னுடைய பார்வையில், அமெரிக்கக் குழு டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் இதற்கு ஒரு தீர்வு காண விரும்புகிறது. நாங்களும் அதையேதான் பெரிதும் விரும்புகிறோம்.

ஆனால், உக்ரைனின் நலன்களை மட்டும் பலி கொடுத்து இது நடந்துவிடக் கூடாது என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறிவிட்டேன்.

பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான முடிவையும் எட்டாமல், ரஷ்யர்கள் தொடர்ந்து எதுவுமே தெரியாததுபோல நடித்துக் கொண்டு பழைய வரலாற்றுக் கதைகளையே பேசிக்கொண்டிருந்தால், அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகும் தருணம் நிச்சயம் வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *