போல்ட் இடத்தில் கலீல் அஹ்மத்.. ரூதர்போர்ட் இடத்தில் சிவம் துபே.. மும்பை அணியின் மெகா டிரேட் பிளான்! | CSK: MI Plan Big Swap, Rutherford and Boult Out, Target Dube and Khaleel Ahmed from CSK

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: மும்பை அணி நிர்வாகம் ஷெர்ஃபானே ரூதர்போர்டு மற்றும் போல்ட் ஆகியோரை விடுவிக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு சிஎஸ்கே அணியிடம் இருந்து சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரை டிரேட் மூலமாக பெற தீவிரமாக உள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்கள் நடக்கவுள்ளது. இதனால் பல்வேறு அணி நிர்வாகங்களும் ஏலத்திற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக 3 சீசன்களாக சொதப்பி வரும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணி நிர்வாகங்கள் இம்முறை கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

CSK

இந்த முறை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முடிவிற்கு அந்த அணி நிர்வாகம் வந்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுத்தது. கடந்த சீசனின் போதே ஹர்திக் பாண்டியாவுக்கும், அந்த அணி நிர்வாகத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலமாக வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முயற்சித்தது. அதேபோல் மும்பை அணிக்கு தேவையான வீரர்கள் சிஎஸ்கே அணியிலும் இருக்கின்றனர். அதாவது மும்பை அணியின் ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்டு மற்றும் போல்ட் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. இதனால் இவர்களை கழற்றிவிட மும்பை அணி முடிவுக்கு வந்துள்ளது.

இவர்களின் இடத்தை சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் மூலம் நிரப்ப ஆலோசித்து வருகிறது. இரு வெளிநாட்டு வீரர்களை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தை இரு இந்திய வீரர்களை கொண்டு நிரப்ப முடியும் என்பதால் மும்பை நிர்வாகமும் டிரேட் பேச்சுவார்த்தையில் ஆர்வமாகி உள்ளது. அதேபோல் அன்சுல் கம்போஜ் மீதும் கண் வைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் அன்சுல் கம்போஜ் இல்லையென்றால் உர்வில் படேலை வாங்கவும் ஆர்வம் காட்டி இருக்கிறது. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் அன்சுல் கம்போஜ் மற்றும் உர்வில் படேல் ஆகியோரை விட தயாராக இல்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரை விட்டுக் கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முன் வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *