மகளிருக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் விலை அதிரடி குறைவு  – Kumudam

Spread the love

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் அதிரடியாக உயர்ந்து சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. 

நேற்றைய தினம் தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 30-க்கும், ஒரு சவரன் தங்கம்  ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 240-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று காலை சற்று உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,060-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை இன்று காலை குறைந்தது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் குறைந்து விற்பனை ஆனது. சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *