மகளிர் இடஒதுக்கீடு: “இந்த மசோதாவுக்கு முன்னோடி மோதிலால் நேரு” – நாடாளுமன்றத்தில் பிரியாங்கா காந்தி | Amit Shah laughter at Priyanka Gandhi’s speech in parliment

Spread the love

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா, மாநிலங்கள், மற்றும் யூனியர் பிரதேசங்களில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா என மூன்று மசோதாங்கள் குறித்து நேற்று விவாதிக்கப்பட்டன.

இதில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

அதேநேரம், தொகுது மறுசீரமைப்பு மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த மசோதா குறித்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி உரையில், “மகளிர் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் ஆதரித்தாலும், தற்போதைய விவாதம் அந்த ஆதரவைப் பற்றியது அல்ல. மாறாக இந்த மசோதாவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுவது குறித்தே விவாதம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

இந்த மகளிர் இடஒதுக்கீடு நடவடிக்கை என்பது, உண்மையில் NDA தலைமையிலான மத்திய அரசு தனது தேர்தல் ஆதாயத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்தும் ஒரு “அரசியல் துருப்புச்சீட்டு’.

பெண்கள் உரிமைகளுக்காக பா.ஜ.க எவ்வாறு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி தனது முந்தைய உரையில் குறிப்பிட்டிருந்தார். இந்திய அரசியலமைப்பைச் சிதைப்பதன் மூலமே பா.ஜ.க தனது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தி வருகிறது.

நீங்கள் அனைவரும் முழுமையான திட்டமிடலோடு இங்கு வந்திருக்கிறீர்கள். இன்று சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் தந்திரத்தைக் கண்டு அவரே திகைத்துப்போயிருப்பார்” என்றார். அப்போது அமித் ஷா, கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பிற பா.ஜ.க எம்.பி.க்களிடையே பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *