மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் சேரும் சரத்பவார்?முதல்வருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு | Sharad Pawar to join BJP alliance: NCP leaders meet Maharashtra CM Fadnavis

Spread the love

நேற்று இரவு சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுனில் தட்கர, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அஜித்பவார்

அஜித்பவார்

முதல் முறையாக இரு கட்சி தலைவர்களும் சேர்ந்து முதல்வர் பட்னாவிஸைச் சந்தித்துப் பேசி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், அஜித்பவார் கட்சியுடன் இணைவது தொடர்பாக இப்பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஜெயந்த் பாட்டீல் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து இப்பேச்சுவார்த்தை குறித்து விவாதித்துள்ளார்.

சரத்பவார் கட்சி பா.ஜ.க கூட்டணியில் சேரும் பட்சத்தில் பா.ஜ.க கூட்டணியில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சரத்பவார் கட்சியில் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஜெயந்த் பாட்டீல் பா.ஜ.க செயலாளர் வினோத் தாவ்டேயுடனும் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஆனாலும் சரத்பவார் தொடர்ந்து இவ்விவகாரத்தில் மவுனம் சாதித்து வந்தார். எதிர்க்கட்சியில் நீடிப்பது தொகுதி வளர்ச்சி நிதி, நிர்வாக அனுமதிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால், சரத்பவார் கட்சியைச் சேர்ந்த பாதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கூட்டணியில் சேர விரும்புவதாக சரத்பவாரிடம் மறைமுகமாகத் தெரிவித்து இருந்தனர்.

இதனால் மகாராஷ்டிரா அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியில் ஏற்பட்டது போன்ற ஒருநிலையைத் தவிர்க்க சரத்பவார் முயன்று வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *