மசூதியில் வாக்கு சேகரித்த தவெகவினர்! பள்ளிவாசலில் விசில் அடித்ததால் சங்கடப்பட்ட அமைச்சர் ஷாஜகான்! | TVK cadres blow whistle in Mosque at Chengelput when they are in campaign

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக த.வெ.க கட்சியைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்கும் போது தங்களது சின்னமான விசிலை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் உள்ள இஸ்லாமியர் பள்ளிவாசலில், தொழுகை முடித்து வெளியே வருவோரிடம் தவெகவினர் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

by election 2026 tvk maduranthagam

அப்போது ஐயூஎம்எல் கட்சியை சேர்ந்தவரும் அமைச்சருமான ஷாஜகான் வாக்கு சேகரித்தார்.
த.வெ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிக்க வந்து, பள்ளிவாசல் உள்ளே இருந்து விசில் அடித்தனர். இதனால் அங்கிருந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் “பள்ளிவாசலில் இருந்து விசில் அடிக்காதீர்கள், வாக்கு சேகரிக்க வந்தால் வாக்கு சேகரித்து விட்டு செல்லுங்கள்” என்று சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

த.வெ.க கட்சியினர் பள்ளிகள், கோவில்கள் என பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்கும் போது அவர்களது சின்னமான விசில் அடித்து வாக்கு சேகரிக்கிறார்கள். இது அப்பகுதியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *