மதிமாறன் புகேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான படம் “மண்டாடி’.
மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் படத்தைப் பார்த்த சூர்யா, சூரியை பாராட்டி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.
சூர்யா அனுப்பி இருக்கும் கடிதத்தில், ” சூரி, அட்டகாசம்! இந்த கேரக்டருக்காக எவ்வளவு மன உறுதியும் உடல் உறுதியும் தேவைப்பட்டிருக்கும்னு நினைச்சாலே பிரம்மிப்பா இருக்கு! உங்க வெற்றியைப் பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
‘மண்டாடி’ வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று வாழ்த்தியிருக்கிறார்.