மதுராந்தகம் இடைத்தேர்தல்: ‘வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்…’ – பின்னணி என்ன? | Major Candidates for Madurantagam Byelection candidate are outsiders

Spread the love

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று தரப்பும் வெளியூர் ஆட்களை களமிறக்கியிருப்பது, பேசுபொருளாகியுள்ளது!

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் மரகதம் குமரவேல்

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் மரகதம் குமரவேல்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் திருப்போரூர் தொகுதியின் தையூரைச் சேர்ந்தவர். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தையூரிலுள்ள பூத்தில்தான் வாக்குச் செலுத்தியிருக்கிறார். அதேபோல, தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் சென்னை எழும்பூர் தொகுதியில் வசிக்கிறார். எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், எழும்பூரில்தான் வாக்களித்துவருகிறார். அ.தி.மு.க-வின் வேட்பாளரான கணிதா சம்பத் 2021-ல் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் செய்யூர் தொகுதியில்தான் வாக்களித்து வருகிறார். எனவே மூன்று வேட்பாளர்களும் மதுராந்தகத்தைச் சார்ந்தவர்களோ அங்கே வசிப்பவர்களோ இல்லை. த.வெ.க-வுக்கு மரகதம் குமரவேலை நிறுத்த வேண்டிய அழுத்தம் இருப்பதால், அவர்களும் மாற்று வேட்பாளர்கள் குறித்து சிந்திக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *