மதுரையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தவரை வெட்டி படுகொலை செய்த கும்பல்! சொத்து தகராறு காரணமா? \ Madurai gang hacked man to death while he was sleeping at home! Was a property dispute the reason?

Spread the love

மதுரை மாவட்டம் பரவை வேலவெளிவீதி 4 வது குறுக்குதெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ் வயது 24 டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்

இவருக்கு தாரணி என்ற மனைவியும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர்.

சந்தோஷ் மனைவியின் தந்தை செந்தில்குமார். இவருக்கும் இவரது சகோதரர்களான கணேஷ், சிவகுமார் ஆகிய இருவருக்கும் சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த மாதம் திருவிழாவிற்கு சந்தோஷ் சிலைமான் அருகே பனையூர் பகுதிக்குச் சென்றபோது அங்கு சந்தோஷ் மாமனார் செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர்களுடன் சொத்து சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறின்போது சந்தோஷ் தனது மாமனாருக்கு ஆதரவாக நின்று சிவகுமார், கணேஷ் ஆகியோரிடம் சண்டையிட்டு, சிவகுமாரை சந்தோஷ் அறிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சந்தோஷ் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று வீட்டின் கதவை உடைத்து சந்தோஷை வெட்டியது. இதில் முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

தகவலறிந்து வந்த சமயநல்லூர் காவல்துறையினர் இறந்த சந்தோஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு சென்றார்.

சொத்து தகராறு காரணமாக சந்தோஷ் கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என சமயநல்லூர் காவல்துறையின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *