மதுரை திமுகவில் நடக்கும் தில்லாலங்கடி.. மா.செ-க்களின் ஆதரவாளர்கள் செய்த வேலை.. தலைமைக்கு கடிதம்! | Madurai DMK Functionaries Reportedly Change Addresses Amid Party Revamp; Complaint Filed

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மதுரை: திமுகவில் மறுசீரமைப்பு நடந்து வரும் நிலையில், மதுரையில் திமுக நிர்வாகிகள் பலரும் முகவரியை மாற்றும் பணிகளில் இறங்கியுள்ளனர். 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்று பிரிக்கப்பட்டுள்ள சூழலில், தங்களுக்கு சாதகமான மாவட்டச் செயலாளர்களின் தொகுதிகளுக்கு நிர்வாகிகள் மாற முடிவு எடுத்து காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக திமுக தலைமைக்கு புகார் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன. 2 தொகுதிகள் ஒரு மாவட்டம் என்று பிரிக்கப்பட்டு, 110 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாநகரச் செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறுநில மன்னர்களாக செயல்பட்டு வரும் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது.

Madurai DMK

புதிய பவர் செண்டர்களும் திமுகவில் ஒவ்வொரு பகுதிக்கு உருவாக உள்ளனர். இதனால் திமுகவில் பதவிக்கு வருவதற்கு மிகப்பெரிய போட்டி நடந்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் மாவட்டச் செயலாளர்களுக்கு கீழ் உள்ள பதவிகளை கைப்பற்ற பல்வேறு வேலைகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தங்களுக்கு சாதகமான மாவட்டச் செயலாளர் தொகுதிக்கு மாற காய் நகர்த்த தொடங்கியுள்ளனர்.

மதுரையை பொறுத்தவரை மதுரை தெற்கு, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி என்று மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், புதிய மாவட்டச் செயலாளர்கள் உருவாக்கப்பட உள்ளனர். அதேபோல் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்களின் ஆதரவாளர்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு செல்ல முகவரியை மாற்றி தில்லாலங்கடி செய்து வருகின்றனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோரின் ஆதரவாளர்கள் முகவரியை வேறு தொகுதிக்கு மாற தொடங்கியுள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல் உறவினர்கள், நண்பர்களும் முகவரியை மாற்ற தொடங்கியுள்ளனர். இதனால் திமுகவில் பதவியை அடைய முயற்சிக்கும் நபர்கள் இதுதொடர்பாக திமுக தலைமைக்கு புகார் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்துடன் ஆதாரங்களும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே மதுரையில் தன்னை மீறி எதுவும் நடக்காது என்று மூர்த்தி பேசியது சர்ச்சையாகியது. தற்போது திமுகவினர் பதவிக்காக ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் தொகுதிகளுக்கு முகவரியை மாற்றி வருவது சர்ச்சையாகி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *