கோவை – பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மதன்ராஜா, ”மூலப் பொருட்கள் விலை உயர்வு என்பது இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது அல்ல, அது உலகளாவிய விஷயம். அண்மையில் நடந்த போர் காரணமாகவும், மூலப்பொருட்கள் விலை அதிகரித்தது.

அது நிலையானது அல்ல, நிச்சயமாக அதுவும் மாறும். மின்சார நிலை கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.