மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்திலுள்ள பார்கி அணையில் 3 நாட்களுக்கு முன்பு படகில் சுற்றுலா சென்றபோது திடீரென்று படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்திருந்தனர்.

28 பேர் மீட்கப்பட்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பான நிறைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.
அந்த வகையில் விபத்தின்போது ஒரு தாய் தனது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரைக் கண்கலங்க செய்திருந்தது.
ஆனால் இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் அந்த வைரல் புகைப்படம் உண்மையானது அல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஜபல்பூர் காவல்துறை அதிகாரிகளும் வைரலான அந்தப் படத்திற்கும் விபத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உறுதியாக மறுத்துள்ளனர்.
படகு விபத்தில் மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் என்று பகிரப்பட்ட படம் AI புகைப்படம் என்று தெரியவந்திருக்கிறது.