வேகவைக்காத முட்டை, காய்ச்சாத பால், ஆறவைத்துச் சரியாகக் குளிரூட்டப்படாமல் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் கவனம் தேவை. அதைவிட முக்கியமாக, உணவு சமைக்கும் மற்றும் தயாரிக்கும் இடங்களில் அதிகபட்ச சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
கழிவறையைப் பயன்படுத்திய பின்பு சுத்தமான நீரில் சோப்பு போட்டு கைகளை நன்றைக் கழுவிய பிறகே உணவைக் கையாள வேண்டும். சுகாதாரக் குறைபாடு உள்ள இடங்களில் சமைக்கப்படும் உணவுகளின் மூலமாகவோ அல்லது நீரின் மூலமாகவோதான் நமக்கு அதிகமான கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. வீட்டிலும் சமைத்த உணவு, சமைக்காத உணவு, காய்கறி அல்லது இறைச்சி வெட்டும் பலகைகள் போன்ற ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சமைத்த உணவை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் சிறு சிறு பாத்திரங்களில் நிரப்பி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். ஒருமுறை சாப்பிடுவதற்குத் தேவையான அளவை மட்டும் எடுத்துச் சூடுபடுத்திச் சாப்பிட வேண்டும். மாறாக, மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதும், ஆறவைத்து மறுபடியும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்துவதும் கூடாது. இப்படி சுகாதாரமான, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தாலே, மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
டாக்டர் பாசுமணி:
சென்னை வடபழனி, காவேரி மருத்துவமனையில் செரிமானத்துறை தலைமை மருத்துவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.